குன்னத்தூர் குடைவரை – உதயகிரீசுவரர் சிவன் ஆலயம்

மதுரை வடக்கு வட்டத்திற்குள் அடங்கிய சிற்றூர் குன்னத்தூர்.  முற்காலப் பாண்டியர் காலத்தில் ஏறக்குறைய ஒன்பது அல்லது 10ம் நூ. வாக்கில் இவ்வூர் குன்றத்தூர்க் குளக்கீழ் என்ற நாட்டுப் பிரிவுக்குட்பட்ட பிரமதேய  கிராமமாகத் திகழ்ந்துள்ளது. இன்று குன்னத்தூர்   மலை என்று அழைக்கப்படும் குன்றில் இந்தக் குடைவரைக் கோயில் அமைந்துள்ளது.

குன்றின் கிழக்குப் பகுதியில் சூரியன் உதிக்கும் கிழக்குத் திக்கை நோக்கியதாக அமைக்கப்பட்டுள்ளமையால் உதயகிரீசுவரர் என்ற பெயர் இந்தs சிவாலயத்திற்கு வழக்கில் உள்ளது.

வித்தியாசமான வடிவில்  தெற்கு நோக்கிய பாறையில் நின்ற நிலையில் இருக்கும் விநாயகர் திருமேனி செதுக்கப்பட்டுள்ளது.

பிற்கால நந்தி சிற்பம் ஒன்றும் கோயிலுக்கு முன்னால் அமைக்கப்பட்டுள்ளது.

துணை நூல்:
மாமதுரை,பொ.இராசேந்திரன், சொ.சாந்தலிங்கம், –  பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் வெளியீடு.

விழியப் பதிவைக் காண: http://video-thf.blogspot.de/2017/04/blog-post_29.html
யூடியூபில் காண:   https://www.youtube.com/watch?v=F8NaGEyKa6Q&feature=youtu.be

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​​

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *