Home Tamil NaduKaraikudi திருமலை ஸ்ரீ மலைக்கொழுந்தீஸ்வரர் ஆலயம் – குடைவரை

திருமலை ஸ்ரீ மலைக்கொழுந்தீஸ்வரர் ஆலயம் – குடைவரை

by Dr.K.Subashini
0 comment

திருமலை எனப்படும் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மலைக்கொழுந்தீஸ்வரர் ஆலயம் மிகப் பழமை வாய்ந்தது. 7ம் அல்லது 8ம் நூற்றாண்டு பாண்டியர் காலத்துக் கோயில் என்ற பழம் பெருமை கொண்டது. இந்தக் கோயில் அமைந்துள்ள சூழலை முதல் விழியப் பதிவு காட்டுகின்றது. பசுமையான நெல் வயல்கள் சூழ்ந்த இடம். தாமரைப் பூக்கள் நிறைந்த குளங்கள் என இயற்கை எழிலின் அற்புதங்களைக் கண்களுக்கு விருந்தாக்கிக் காட்டும் இடம் இப்பகுதி. இங்கே உள்ள இக்கோயிலையும் இக்கோயிலுக்கு மேலே உள்ள பாறைகளையும் முதல் பகுதியில் கேமராவில் படம் பிடித்து பதிவாக்கித் தந்துள்ளேன். இந்த பாறைகளில் பெருங்கற்காலச் சித்திரங்கள் இன்றும் காணக்கிடைக்கின்றன.

 http://www.youtube.com/watch?v=daofS7feDgo&feature=youtu.be

 

இந்த விழியப் பதிவில் திருமலை மலைப்பாறை பகுதியில் உள்ள பெருங்கற்காலத்து சித்திரங்களும் சமணப்படுகைகளையும் காணலாம். இந்தச் சித்திரங்கள் எகிப்திய பழங்கால நாகரித்தின் பிரதிபலிப்பாக உள்ள எகிப்திய தெய்வ வடிவங்களின் உருவங்களை ஒத்து அமைந்திருப்பதை நேரில் கண்டு வியந்தோம். இந்த பாறைகளுக்குக் கீழ் பகுதியில் சமணப்பள்ளிகள் அமைந்திருந்தமையை வெளிக்காட்டும் வகையில் இன்னமும் காணக்கிடைக்கும் சமணப் படுகைகளைக் காண முடிகின்றது.

இச்சமணப் படுகைகள் அமைந்துள்ள தரைப்பகுதியிலும் பாறைகளிலும் புராதனச் சின்னங்களின் பால் அக்கறையும் தெளிவும் இல்லாத பொதுமக்களில் சிலர் செய்து வைத்திருக்கும் சேதங்கள் மனதை வருத்தமடையச் செய்கின்றன. இவற்றையும் இந்தப் பதிவில் நீங்கள் காணலாம்.

 

 http://www.youtube.com/watch?v=GDc64xb0oos&feature=youtu.be

 

மலைக்கொழுந்தீஸ்வரர் ஆலயத்தின் குடைவரைக் கோயிலைக் காட்டும் ஒரு விழியப் பதிவு இது. முழுதாக மலையைக் குடைந்து உருவாக்கப்பட்ட கோயில் இது. இங்கே முருகன், மீனாட்சி சுந்தரேஸ்வரர், பிள்ளையார் சிலைகள் புடைப்புச்சிற்பங்களாக உள்ளன.

இப்பதிவில் மகிஷாசுரமர்த்தினியின் சிலை விளக்கம், கோயில் முழுக்க எழுதப்பட்டிருக்கும் தமிழ் கல்வெட்டுக்கள் விளக்கம், பூத்தொடுக்கும் கல்லில் உள்ள கல்வெட்டுக்கள், புடைப்புச் சிற்பங்களின் விளக்கம் என டாக்டர் வள்ளி அவர்கள் வழங்கும் தொடர் விளக்கம் அனைவரும் கேட்டு பயன்பெறத்தக்கவை.

மலைப்பாறை சுவர் முழுமைக்கும் நீண்டு நிறைந்திருக்கும் கல்வெட்டுக்கள் பிரமிக்க வைக்கின்றன. இங்கே பார்த்து நாங்கள் வியந்த காட்சியை நீங்களும் இந்த 12 நிமிட விழியப் பதிவின் வழியாகப் பார்த்து மகிழுங்கள்.

 

 http://www.youtube.com/watch?v=5qUODMjoeNo&feature=youtu.be

 

 

You may also like

Leave a Comment